Saturday, December 20, 2014

 இந்த  உலகம் எவர்களுடைய கைகளில் இருக்கிறதோ அவர்கள் உலக மக்கள் அனைவரையும் கண்காணிக்க, கொண்டு வந்து கொண்டிருக்கிற திட்டம்தான் அடையாள அட்டை திட்டம்.
நம் நாட்டில் இதற்குப் பெயர் ஆதார் அடையாள அட்டை.
ஒரு மனிதன்இந்த நாட்டில் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு அவசியம் தேவை ஆதார் அட்டை என்கிற இந்த திட்டம் காங்கிரஸ், பா.ஜ.க வை சார்ந்தது இல்லை. பின்னணியில் பாஸ்கர் ஐயா அடையாளம் காட்டும் ஆசாமிகள்தான் இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் இந்த அட்டை அவர்களுக்கு எப்படி உபயோகமாகப் போகிறது என்பதை கற்பனையில் வடிவமைத்து இணைய உலகில் பரவ விட்டிருக்கிறார்கள் சிலர். இது ரசிக்க மட்டும் அல்ல. கவலை கொள்ளவும் வைக்கிறது.

அந்தப் பதிவு இதோ -

ஆதார் அட்டை பிற்காலத்தில் எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு ஜோக் வேகமாக பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது இங்கே...
2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

(போன் மணி அடிக்கிறது ) 
 
ஆப்பரேட்டர்: ஹலோ.. பிஸ்ஸா ஹட்..
கஸ்டமர்: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு, காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? 
ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர்: வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர்: வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர்: எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர்: மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர்: என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர்: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர: ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர்: வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்.


இவ்வாறு முடிகிறது அந்த பகிர்வு!
நன்றி : ஒன் இந்தியா , தி இந்து

Thursday, December 11, 2014

மருத்துவ உலகம் முழுக்க முழுக்க உலகை ஆண்டு கொண்டிருக்கிற கார்பரேட் கம்பெனிகளின் கையில்தான் உள்ளது. அதைத்தான் ஹீலர் பாஸ்கர் ஐயாவும் தனது "உலக அரசியல்" என்ற தனது உரையில் விளக்குகிறார்.

இவர்களை எதிர்ப்பவர்களை ஏதாவது ஒரு வகையில் அவர்களை கிரிமினல்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தவறான நடத்தை உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி உலகை நம்ப வைப்பார்கள்.

இதோ இன்னொரு ஆதாரம் : பிஹாரின் எம்.பி பப்பு யாதவ் கிரிமினல் குற்றம்  சாட்டப்பட்டவர். அவரின் பேட்டியை படியுங்கள். இது தி இந்து பத்திரிகையில் 11.12.2014 அன்று வெளியாகியுள்ளது.

பிஹாரில், கிரிமினல் அரசியல்வாதிகள் என குறிப்பிடப்படுபவர்களில் ராஜீவ் ரஞ்சன் யாதவ் எனப்படும் பப்பு யாதவுக்கு முதன்மையான இடமுண்டு. சுயேச்சை மற்றும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மதேபுரா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
‘பிஹாரில் மருத்துவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தும், தேவைக்கு அதிக மாக மருந்துகளை எழுதிக் கொடுத்தும் மக்களிடமிருந்து கொள்ளையடிக் கின்றனர்’ எனக் குற்றம்சாட்டும் இவர், தனது தொகுதியில் மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என ‘மிரட்டி’ வைத்தி ருக்கிறார்.
மருத்துவர்கள் ’பணத்துக்காக உயிர்களை கொல்பவர்கள்’, ‘மனித சதைகளை உண்ணும் பேய்கள்’ என கடுமையாக விமர்சிக்கும் பப்பு மீது இந்திய மருத்துவர் சங்கம், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ‘தி இந்து’ சார்பில் அவரிடம் பேசியதிலிருந்து

திடீரென மருத்துவர்களுக்கு எதிரான போராட்டம் ஏன்?
1990-ல் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மருத்து வர்கள் அதிகபட்ச கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறேன்.
1994-ல் ஒருமுறை மருத்துவர்களுடன் எனக்கு நேரடி மோதல் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் அதிக மருந்துகள், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பதை எனது தொகுதியில் குறைத்தனர். எனது சொந்தக் காரணங்களினால் ஏற்பட்ட அரசியல் இடைவெளியில் (அப்போது கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார்) மருத்துவர்கள் மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 

நீங்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன?
நம் நாட்டில் 45 சதவிகித மருத்துவர்கள் தவறான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.
நர்சிங் ஹோம்களுக்கான சட்டத்தை இன்று வரை அமல்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் செய்யும் முறைகேடுகள் பலவும் ஊடகங்களில் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளி யாகியும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மருத்துவர்களில் பலரும் வரம்புமீறி ஆலோசனைக் கட்டணம் வாங்குகின்றனர்.
மருத்துவர்களை கண்காணிக்க அரசு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குணப் படுத்த முடியாத ஒரு வியாதி தனியார் மருத்துவமனையில் குணப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

கிரிமினல் அரசியல்வாதிகளில் ஒருவர் எனக் கருதப்படும் நீங்கள் சட்டவிரோதமாக மருத்துவர்களை மிரட்டுவது சரியா?
(உடன் கோபமானவர் அதை கட்டுப்படுத்த சில நிமிடங்கள் மௌனமானார்) நாட்டை சூறையாடு பவர்களை தட்டிக் கேட்டு, ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தால் கிரிமினல் என்கிறார்கள்.
மருத்துவர்கள் எவ்வளவு முறை கேடாக சம்பாதிக்கிறார்களோ அவ்வளவு பணத்தை எனது சிறுவயது முதல் மக்களுக்கு உதவியாக அளிக்கிறேன். பிஹார் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்களோ அந்த அளவுக்கு மக்களுக்கு தனி ஒருவனாக அள்ளித் தரும் நான் கிரிமினலா.
மருத்துவம் என்ற பெயரில் பாலியல் குற்றங்கள் செய்யும் மருத்துவர்கள் கிரிமினலா அல்லது மக்களுக்காக தொடர்ந்து தடியடிகள் பெறும் நான் கிரிமினலா? 

நீங்கள் சார்ந்துள்ள ராஷ்ட்ரீரிய ஜனதா தளம் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறதா?
இந்த விஷயத்தில் கட்சி எனக்கு ஆதரவளிப்பதில்லை என்றாலும், லாலுவின் தார்மீக ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கிறது. ஒரு பாமர மனிதனுக்கான மகிழ்ச்சி மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தை யார் சொன்னாலும் கைவிட மாட்டேன். 

உங்கள் கோரிக்கைக்கு மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளதா?
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் பணக் காரர்களின் தரகர்கள். ஊழலை எதிர்த்து போராடுவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சியினரும் மருத்துவர்கள் பிரச்சினையில் அமைதி காக்கின்றனர்.
இந்த பிரச்சினையில் பிஹாரை சரி செய்து விட்டு, வேற்று மாநிலங் களுக்கும் போராட வருவேன். இந்தப் பிரச்சினைக்காக தமிழகத்தின் அமைப்புகள் என்னை குரல் கொடுக்க அழைத்தால் அங்கும் வந்து போராடத் தயாராக இருக்கிறேன். 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்

Saturday, December 6, 2014

கபளீகரம்

கடந்த சில வருடங்களாக மந்தமாக இருந்த நிறுவனங்கள் கையகப்படுத்துதல் நடவடிக்கை கடந்த வாரத்தில் சூடு பிடித்தது. கடந்த வாரத்தில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.
ரீடெய்ல்
மும்பையை சேர்ந்த பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைஸஸ் நிறுவனம், பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்கியது. 300 கோடி ரூபாய் கொடுத்து நீல்கிரிஸை வாங்கியது பியூச்சர் குழுமம்.
வங்கி
ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி வாங்கியது. 1000 ஐஎன்ஜி வைஸ்யா பங்குக்கு 725 கோடக் பங்கு கிடைக்கும். இதன் மூலம் நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோடக் மாறும். இதன் மதிப்பு 15033 கோடி ரூபாய்.
தகவல் தொழில்நுட்பம்
டெக் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவின் லைட்பிரிட்ஜ் கம்யூனிகேஷன்ஸ் (எல்சிசி) நிறுவனத்தை வாங்கியது. இந்த மதிப்பு ரூ.1486 கோடி, எல்சிசி நிறுவனத்துக்கு 8.5 கோடி டாலர் கடன் இருக்கிறது. எல்சிசி நிறுவனத்துக்கு 5 கண்டங்களில் 5700 பணியாளர்கள் இருக்கிறார்கள்.
மின்சாரம்
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் 2 நீர் மின் நிலையங்களை வாங்கியது. இதற்காக ரூ.9,700 கோடி செலவிட்டது. ரிலையன்ஸ் பவர் இந்த நிறுவனத்தை வாங்குவதாக இருந்தத திட்டத்தை கைவிட்ட பிறகு ஜே.எஸ்.டபிள்யூ வாங்கியது.

நன்றி : தி இந்து (தமிழ்) 02.12.2014

உலகம் இவர்கள் கையில்- முன்னுரை



உலகம் இவர்கள் கையில்

ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் ஏப்ரல் 1, 2014 அன்று உலக அரசியல் என்ற தலைப்பில் தான் பேசிய ஒரு உரையை அல்ல பேருரையை வெளியிட்டார். (பார்க்க: http://anatomictherapy.org/tworld-poltics.php )

அதில் அதிர வைக்கும் பல உண்மைகளை வெளியிட்டார். இந்த உலகின் பெரும்பாலான ஆட்சி, அதிகாரங்கள் இப்பொழுது யார் கையில் இருக்கிறது என்ற விஷயத்தை புட்டு புட்டு அந்த உரையில் வைத்தார்.

அவர் சொல்கிறார் :

“நாமெல்லாம் சுதந்திர நாட்டின் அடிமைகளாக இ௫க்கிறோம். நம்மை இப்படி அடிமைப்படுத்தி வைத்தி௫ப்பவா்களை அடையாளம் கண்டு முகத்திரையைக் கிழிக்க வேண்டாமா?



வியாபாரம் செய்ய வந்தவா்கள் பொ௫ளை விற்று நம் சுதந்திரத்தை வாங்கிக் கொண்டார்கள். அவா்கள் யாரென்று தெரியாமலேயே நாம் அவா்களிடம் அடிமைபட்டு இ௫க்கிறோம். இந்த நிலை மாற வேண்டாமா?
ஜாதி, இனம், மொழி, மதம், தேசம் என்று நம்மைப் பிரித்து சூழ்ச்சியால் நம்மை முட்டாளாக்கிக் கொண்டு இ௫ப்பவா்களை அடையாளம் காணவேண்டாமா?


.
நீங்களும் உங்கள் சந்ததிகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதன் முழுபலனும் உங்களுக்கு இல்லை. உங்களுக்கு எதுவும் சொந்தமாக போவதில்லை. பின் யா௫க்காக உழைக்கிறீா்கள்? சிந்தியுங்கள்

750 கோடி உலக மக்களின் நலனில் அக்கறை கொள்வோம்
.


உலக மக்களின் நன்மைக்காக நம் கரங்களை ஒன்றினணப்போம். நன்மையை எங்கும் பரவச் செய்வோம். தீமையை இல்லாமல் செய்வோம்.
அறியாமை விலங்கினை உடைத்து தெளிவு பெறுவோம்.”




அவரின் இந்த முழு உரையயும் (10 பாகங்கள்) கேட்டு உள்வாங்கிக் கொண்ட பிறகு அவர் சொன்னது மாதிரியே டி.வி, பேப்பர், மீடியாவில் வரும் எல்லா செய்திகளும் புதிய பார்வையில் தெரிகிறது.

அப்படி அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை, ஆதாரங்களை இனி இங்கே பதிக்கிறேன்.